Subayogam Matrimony
Introductions Subayogam Matrimony
Ofrecemos un servicio matrimonial de confianza desde hace más de 25 años.
சுபயோகம் திருமண அமைப்பகம் தங்களை அன்புடன் வரவேற்கின்றதுஎங்கள் திருமண தகவல் பரிமாற்றம் முதன் முதலில் என் தாயார் பட்டம்மாள் அவள்களால் 1974-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது மிகச்சிறிய அளவில் வீட்டிலேயே நடத்தப்பட்டது. பிறகு அவர்களின் மகனாகிய நான் (M.R.பன்னீர் செல்வம்) இந்த திருமண தகவல் பரிமாற்ற சேவையை நவீனப்படுத்தி 1984-ம் ஆண்டு சுபயோகம் திருமண அமைப்பகம் என்ற பெயரில் அலுவலகம் தொடங்கப்பட்டது. 1998-ம் ஆண்டு வரை சாதாரணமாக செயல்பட்ட எங்கள் "சுபயோகம் திருமண அமைப்பகம்" 1999-ம் ஆண்டு முதல் கணினி (COMPUTERIZADO) மயமாக்கப்பட்டது.
இன்று வரை மிகச்சிறந்த முறையில் செயல்பட்டு 15-08-2001- இல் சிறந்த சேவைக்கான மாநில விருது பெற்றது. எங்கள் நிறுவனம் மூலமாக இதுவரை பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருமணங்களை நடத்தி கொடுத்த கைராசியான திருமண அமைப்பகம் என்ற நன்மதிப்பை மக்களிடையே பெற்றுள்ளது.
எங்கள் நிறுவனம் தஞ்சாவூரை தலைமையிடமாக கொண்டு இயங்குகின்றது. எங்கள் கிளை அலுவலகம் திருச்சியில் உள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் கிளை அலுவலகங்கள் திறக்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கின்றோம்.
எங்கள் “சுபயோகம் திருமண அமைப்பகம்” இரண்டு தலைமுறையை கடந்து இப்பொழுது மூன்றாம் தலைமுறையாக என் மகன் P.சரவணகுமாரால் இன்னும் நவீன முறையில் உலகலாவிய (SITIO WEB) முறையில் தொடர்ந்து சிறப்பாக செயல்படுகிறது.
மேலும் எங்கள் சுபயோகம் திருமண தகவல் மையம் சிறப்பாக செயல்பட தங்களது ஆதரவையும் ஒத்துழைப்பையும் தரும்படி கேட்டுக்கொள்கின்றோம்
